மனைவியை அடித்த கணவர் கைது
சாத்துார்: சாத்துார் கோபாலபுரத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 30. இவர் கணவர் காளிராஜ் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.நேற்று முன்தினம் காளிராஜ் மனைவி வீட்டிற்கு சென்று அவரை குடும்பம் நடத்த வரக் கூறி கம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்.சாத்துார் தாலுகா போலீசார் காளிராஜ் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பெண்ணுடன் தங்கிய வாலிபர் மர்ம சாவு
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் 27, லாட்ஜ் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவர் டிப்ளமோ முடித்து திருப்பூரில் 7 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்தார். இவர் அங்கு பணிபுரியும் நந்தினியுடன் பழகினார். திருப்பூரில் இருந்து காசி விஸ்வநாதன் விருதுநகருக்கு ஜூன் 9 ல் வந்தார். ஜூன் 12ல் நண்பர் வீட்டிற்கு செல்வதாக அவரது பெற்றோரிடம் கூறி சென்றார்.
ஜூன் 13 மதியம் திருப்பூரில் இருந்து விருதுநகருக்கு வந்த நந்தினியை ஜீவா லாட்ஜில் தங்க வைத்து விட்டு, இருவருக்கும் உணவு சமைத்து தாருங்கள் என தாயிடம் கேட்டுள்ளார். ஜூன் 14 இரவு 9:00 மணிக்கு லாட்ஜ் அறையில் முக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்சோவில் வாலிபர் கைது
சாத்துார்: சாத்துார் தேரடித் தெருவை சேர்ந்தவர் வீராச்சாமி, 21. அமீர் பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். மகளிர் நல அலுவலர் மாரியம்மாள் போலீசில் புகார் செய்துள்ளார். போக்சோ வழக்கு பதிந்து வீராச்சாமியை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா: வாலிபர் கைது
சிவகாசி: சாட்சியாபுரம் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் கணேஷ் குமார் 22. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.-----