வாலிபர் மர்ம சாவு
சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் பாண்டி 52. இவரது மகன் வைர கணேஷ் 20 , லோடுமேன் வேலை செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் இரவு விஸ்வநத்தத்தில் உள்ள பாரில் மது போதையில் தவறி விழுந்து விட்டதாக கூறி நடக்க முடியாத நிலையில் அவரது நண்பர்கள் வீட்டில் இறக்கி விட்டுள்ளனர். நேற்று காலை வைரகணேஷை எழுப்பிய போது அவர் அசைவில்லாமல் இருந்துள்ளார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா: இருவர் கைது
சிவகாசி: சிவகாசி நதிக்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சூர்யா பிரகாஷ் 30. இவர் அதே பகுதியில் நின்ற போது மாரனேரி போலீசார் அவரை விசாரிக்கையில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் தாழை குளத்துப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் 22, எரிச்சநத்தம் கண்மாய் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெண் மாயம்
சிவகாசி: சிவகாசி கட்ட சின்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி உமாதேவி 36. இருவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற உமாதேவி மீண்டும் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
* சிவகாசி: சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் முருகன் மகள் திவ்யா 22. இரவில் வீட்டில் துாங்கிய அவர் மறுநாள் காலையில் மாயமானார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.