வாலிபர் பலி
சிவகாசி பள்ளப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் 32. இவர் தனது டூவீலரில் ெஹல்மட் அணியாமல் செங்கமலப்பட்டியில் இருந்து சோரம்பட்டி செல்லும் ரோட்டில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி காயம்
சிவகாசி நமஸ்கரித்தான் பட்டியை சேர்ந்தவர் முருகன் 51. இவர் தனது டூவீலரில் விருதுநகர் ரோட்டில் சென்றபோது சோலை காலனியைச் சேர்ந்த போஸ் ஜெய்சிங் 61, ஓட்டி வந்த கார் மோதியதில் காயமடைந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை
சிவகாசி நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி 51. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மன வருத்தத்தில் இருந்தவர் தன் மீது மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிவகாசி அரசு மருத்துவமனையில் இறந்தார். இது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.