48 கிலோ குட்கா பறிமுதல்
ராஜபாளையம்: ராஜபாளையம்- மதுரை ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியே சாக்கு முட்டைகளுடன் வந்த டூவீலரை நிறுத்தி சோதனை இட்டதில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதை அடுத்து 48 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரை பறிமுதல் செய்து மலையடிப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரனை 28, கைது செய்துள்ளனர்.
கஞ்சா பறிமுதல் தம்பதி கைது
சாத்துார்: ஆலங்குளம் எதிர்க்கோட்டை ஹிந்து நடுநிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்று கொண்டிருந்த எதிர்க்கோட்டை ராஜேந்திரன் 60, இவர் மனைவி கருப்பாயி 54, ஆகியோரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சிவகாசி: முதலிப்பட்டி காந்திபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராம்குமார் 34. இவர் நாரணாபுரம் முக்கு ரோடு அருகே அனுமதி இன்றி பட்டாசு வைத்திருந்தார். போலீசார்பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
வெவ்வேறு விபத்து இருவர் காயம்
சிவகாசி: சாட்சியாபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பேச்சியம்மாள் 60. இவர் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது மாஞ்சோலை பட்டியை சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
*சிவகாசி வெள்ளூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்தானம் 55. இவர் தனது டூவீலரில் எரிச்சநத்தம் ரோட்டில் சென்றபோது மதுரை பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்த குணசேகரன் 24, ஓட்டி வந்த கார் மோதியதில் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
விருதுநகர்: முத்தால் நகரைச் சேர்ந்தவர்ராஜகுரு 29. இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால் மன வருத்தம்அடைந்த ராஜகுரு வீட்டில் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.