sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : பிப் 25, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 25, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

விருதுநகர்: கவுண்டன்பட்டி கட்டபொம்மன் காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார் 32. இவர் பட்டாசு மிஷின் திரிகள் 6 கட்டுகளை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா: 4 பேர் கைது

விருதுநகர்: ஆத்துமேடு சிவந்திபுரத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணி எட்வின் 25, பாஸ்கர் 43. இவர்கள் இருவரும் முனியாண்டி கோவில் அருகே 400 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர். இவர்களை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

* ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் போலீசார் கண்காணித்ததில் வளையாபதி தெருவை சேர்ந்த நிர்மல் ராஜா 20, பாரதியார் தெரு முரளி 22, இருவரும் விற்பனைக்காக பதுக்கிய 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை

விருதுநகர்: ரோசல்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 40. இவர் மது பழக்கத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர் பிப். 23 மதியம் 2:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.

* சாத்துார்: சாத்துார் தானியேல் மகன் அருண் பாண்டி, 26.வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சாத்துார்: சாத்துார் பெரியார் நகரை சேர்ந்தவர் வாசன் இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை மேலக் காந்தி நகரில் உள்ளது.நேற்று மதியம் 3:30மணிக்கு தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.தொழிலாளர்கள் தப்பி ஓடினர். யாரும் காயமில்லை. சாத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். சாத்துார்போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us