நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தை சேர்ந்தவர் சித்திர முத்து, 45.ஆலங்குளம் அருகே கீழாண்மறைநாடு செந்தட்டி அய்யனார் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தார்.
அங்கு உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்று மது குடித்துவிட்டு கறிசோறு சாப்பிட்ட போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.