/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர் நிலைகளில் மண் அள்ள அனுமதி ஆய்வு செய்யும் அரசியல் கட்சியினர்
/
நீர் நிலைகளில் மண் அள்ள அனுமதி ஆய்வு செய்யும் அரசியல் கட்சியினர்
நீர் நிலைகளில் மண் அள்ள அனுமதி ஆய்வு செய்யும் அரசியல் கட்சியினர்
நீர் நிலைகளில் மண் அள்ள அனுமதி ஆய்வு செய்யும் அரசியல் கட்சியினர்
ADDED : ஜூலை 09, 2024 04:31 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் நீர் நிலைகளில் இருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண், களிமண் எடுக்க விரைவில் அனுமதி வழங்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துஉள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள கண்மாய்களை அரசியல் கட்சியினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உண்மையாக தொழில் செய்யும்தங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டுமென, விவசாயிகள், செங்கல் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் 283 நீர் நிலைகளில் விவசாயிகள்,மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண், களிமண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் 46, வத்திராயிருப்பில் 49 நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள அரசியல் கட்சியினர் கடந்த சில நாட்களாக கண்மாய்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் உண்மையாக மண் தேவைப்படுவோர் தங்களுக்கு கிடைக்குமா என சந்தேகமடைந்துள்ளனர்.
எனவே, உண்மையான விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை நடத்தும் ஒவ்வொருவருக்கும் சமமான அளவில்மண் எடுக்க அனுமதி கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
அனுமதி ஆணை வழங்கல்: விருதுநகர் மாவட்டத்தில் சாத்துார் எம்.எல்.ஏ., ரகுராமன் முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன், 10 விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை கட்டணமின்றி எடுத்து செல்வதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
தேவைப்படுபவர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். தகவல்கள், சந்தேகங்கள், புகார்களுக்கு 94422 36488 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என்றார்.