/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலில் மார்ச் 18ல் பூக்குழி விழா துவக்கம்

ADDED : மார் 07, 2025 07:16 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் மார்ச் 18 அன்று பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 29ல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதனை முன்னிட்டு அன்றைய தினம் பக்தர்கள் வரிசையில் நின்று காப்பு கட்டுவதை தவிர்க்கவும், பூக்குழி இறங்கும் பக்தர்கள் எண்ணிக்கையை கணக்கிடவும் கோயில் நிர்வாகம் சார்பில், மஞ்சள் நிற காப்பு சீட்டு அட்டை வழங்கப்பட உள்ளது.
இதனை கொடியேற்ற நாள் முதல் பக்தர்கள் கையில் அணிந்து கொள்ளலாம். இதன்மூலம் அன்றைய தினம் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தெரிவித்தார்.