/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டும் குழியுமான சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு
/
குண்டும் குழியுமான சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு
ADDED : ஜூன் 16, 2024 04:25 AM

சாத்துார்: சாத்துார் மெயின் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடும் இருக்கன்குடியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு குண்டு குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் மெயின் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு வழியாக நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் செல்கின்றன.
மேலும் வெளியூரில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு காரில் வரும் பயணிகளும் ஆட்டோக்களும் இந்த வழியாக செல்லுகின்றன.
மேலும் இந்த ரோட்டில் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.
இதனால் பள்ளி வாகனங்களும் அதிக அளவில் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
மேலும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் மற்றொரு ரோடான இருக்கன்குடி ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக கரடு முரடாக காணப்படுகிறது.
சிறிய மழை பெய்தாலும் பள்ளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது. பள்ளம் மேடு தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.
எனவே ரயில்வே ஸ்டேஷன் செல்லும் இரு ரோடுகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.