/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளமான ரோடு, குப்பையை எரிப்பதால் சுவாசக் கோளாறு
/
பள்ளமான ரோடு, குப்பையை எரிப்பதால் சுவாசக் கோளாறு
ADDED : ஏப் 12, 2024 04:05 AM
அருப்புக்கோட்டை: குண்டும், குழியுமாக ரோடு இருப்பதால் உடம்பு வலி ஏற்படுவதாகவும், ஊரில் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையில் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் ஜெயா நகர் மக்கள் புலம்புகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி ரோடு பகுதியில் புறநகர் பகுதியான ஜெயா நகர் உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி ஆண்டு கணக்கில் ஆன போதும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.
திருச்சுழி மெயின் ரோட்டில் இருந்து ஜெயா நகருக்கு வரும் மெயின் ரோடு கற்கள் பெயர்ந்தும், கிடங்காக உள்ளது. ரோடும் கரடு முரடாக உள்ளது.
தெரு விளக்குகளும் இல்லை. இரவில் பயந்து கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது. தெருக்களில் வாறுகால்களே இல்லை. இந்தப் பகுதியில் குடிநீர் வருவது இல்லை. அதிக விலை கொடுத்து தான் குடிநீரை வாங்குகின்றனர். ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய்கள் போடப்பட்டு தண்ணீர் வராமல் உள்ளது.
இந்தப் பகுதியில் ஊராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை ஏதாவது ஒரு பகுதியில் கொட்டி வைத்து எரிக்கின்றனர். இவ்வாறு அடிக்கடி குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர். ஜெயா நகருக்கு அருகில் கட்ட பெருமாள் ஊருணி உள்ளது.
இதை சுற்றியுள்ள வீடுகள், வாறுகால்களில் இருந்து கழிவு நீர் ஊருணியில் விடப்படுவதால் சுகாதார கேடாக உள்ளது. வீடுகளில் உள்ள போர்வெல்களின் நிலத்தடி நீரும் கெட்டு.விட்டது.
ஊருணிக்கு வரும் மழை நீர் வரத்து ஓடைகள் அனைத்தும் அடைபட்டு போய் விட்டன. ஊருணியை தூர்வாரி மழை நீர் சேமிப்பதற்கு உரிய நடவடிக்கை ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும். தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

