/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்தம்

ADDED : பிப் 22, 2025 07:01 AM

தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் ஒப்பந்தப்படி ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் சுமார் 600 விசைத்தறிகளும் இதை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் காலாவதி ஆகிய நிலையில் இந்த ஆண்டு 5 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும்.
இதுகுறித்து பத்திரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
கூலி உயர்வு வழங்காத விசைத்தறி உரிமையாளர்கள், நடவடிக்கை எடுக்காத தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர்.
போராட்டத்தால் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.