/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
/
கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
ADDED : மார் 06, 2025 03:19 AM
தளவாய்புரம் : தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 14ம் நாளாக வேலை நிறுத்தத்தில் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் பட்டு வருகின்றன. இவற்றை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 1500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்ட நிலையில் இந்த ஆண்டு 5 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும்.
கூலி உயர்வு தொடர்பாக விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் தொழிலாளர் நலத்துறை, விசைத்தறி தொழிலாளர்கள் முத்தரப்பு பல கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததால் நேற்று தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முத்துச்சாமிபுரத்திலிருந்து ஊர்வலமாக வந்து செட்டியார்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
14வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்வதால் இன்று கஞ்சி தொட்டி திறந்து வைக்க உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.