/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
/
விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
ADDED : மார் 08, 2025 05:35 AM
தளவாய்புரம்: தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் 4 சதவீத கூலி உயர்வுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் 15 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தளவாய்புரம் அருகே பருத்தி சேலைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் இடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி 2023-ல் ஏற்படுத்தப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தில் 2025--26 ஆண்டுக்கான கூலி உயர்வு வழங்க கோரி பிப். 21 முதல் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மதுரையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பத்ரகாளியம்மன் விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம், தொழில் சங்கங்கள் சார்பில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தையின் முடிவில் நேற்று 4 சதவீத கூலி உயர்வுக்கு உரிமையாளராக தொழிற்சங்கத்தினர் கையெழுத்திட்டனர்.
இதை எடுத்து 15 நாட்களாக நடந்து வந்த விசை தெரிவித்துள்ளார்கள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.