ADDED : ஜூன் 20, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு நேற்று சிறப்புடன் நடந்தது.
நேற்று காலை 6:30 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் மதியம் 12:00 மணி வரை 800 பக்தர்கள் மட்டுமே மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர்.பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.