/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு
/
சதுரகிரியில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு
ADDED : ஆக 02, 2024 06:42 AM

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தாணிப்பாறையில் காலை 5:40 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் பரிசோதனை க்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், 12 மணியையும் கடந்து வந்த பக்தர்கள் மலையேற அனுமதிக்கபடததால்
வனத்துறை கேட் முன்பு தவிப்புடன் காத்திருந்தனர். வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மலையேறினர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர்.
விருதுநகர், மதுரை மாவட்ட போலீசாரும், வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.