/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழைக்கால முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள் தீவிரம்
/
மழைக்கால முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள் தீவிரம்
மழைக்கால முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள் தீவிரம்
மழைக்கால முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள் தீவிரம்
ADDED : செப் 05, 2024 04:21 AM
சிவகாசி நெடுஞ்சாலை துறை சார்பில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்திற்கு வண்ணம் தீட்டுதல், துார்வாறும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள்,தடுப்பு கட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரம், மண்வெட்டி, உள்ளிட்ட தளவாட சாமான்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாலங்கள் சீரமைக்கும் பணிகளில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசியில் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குஉட்பட்ட கங்கர் சேவல் லட்சுமிபுரம் ரோட்டில் நெடுஞ்சாலை துறையினர் சிறு பாலங்களில் வண்ணம் பூசுதல், பாலங்களில் வரத்து வாய்க்காலை துார்வாரி வெள்ளநீர் தேங்காமல் எளிதாக வாய்க்கால்களில் பாய்ந்து செல்வதற்கான பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் காளிதாசன், உதவி பொறியாளர் விக்னேஷ் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகின்றது.