/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் உணவகங்களில் திண்பண்டங்கள்
/
தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் உணவகங்களில் திண்பண்டங்கள்
தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் உணவகங்களில் திண்பண்டங்கள்
தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் உணவகங்களில் திண்பண்டங்கள்
ADDED : ஆக 28, 2024 06:17 AM
விருதுநகர், : விருதுநகர் பகுதியில் குடிசைத் தொழிலில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களை வாங்கும் பிரபல உணவகங்கள், டீக்கடைகள் தங்கள் பெயரில் தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்வது தொடர் கதையாக மாறியுள்ளது.
விருதுநகர் - மதுரை ரோடு, நான்கு வழிச்சாலைகளில் பிரபலமான பெயர்களில் இயங்கும் உணவகங்கள், டீக்கடைகள் அதிகரித்து வருகிறது. இவற்றில் டீ, காபியுடன் சேர்த்து திண்பண்டங்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திண்பண்டங்களை விருதுநகரில் குடிசைத் தொழிலில் தயாரிப்பவர்களிடம் இருந்து வாங்கும் பிரபல கடைகள் தங்கள் பெயரில் பாக்கெட் செய்து விற்பனை செய்கின்றனர்.
இவற்றில் தயாரிப்பு, காலாவதி தேதிகள் குறிப்பிடப்படுவதில்லை. இது குறித்து கேட்கும் வாடிக்கையாளர்களிடம் லோக்கலில் வாங்கி பாக்கெட் செய்யப்பட்ட பொருள். நன்றாக இல்லையென்றால் திரும்ப கொடுத்து விடுங்கள் என கடை ஊழியர்கள் பதிலளிக்கின்றனர். பாக்கெட் பிரித்த பின்பு எப்படி திருப்பி கொடுப்பது என கேட்டால் அதற்கு பதில் இல்லை.
இது போன்ற செயல்களால் வாடிக்கையாளர்கள் நோயாளிகளாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உணவுப்பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் சான்றிதழ் கொடுப்பதுடன் நின்று விடாமல் அடிக்கடி ஆய்வுகள் செய்ய வேண்டும். தடை புகையிலையை பறிமுதல், அபராதம் விதிப்பதில் காட்டும் ஆர்வத்துடன் உணவுப்பொருள்கள் விற்பனை செய்யும் இடங்களிலும் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எனவே பிரபலமான கடைகள் நல்ல பொருட்களை விற்பனை செய்யவார்கள் என்ற அனுமானத்தில் இருக்கும் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.