/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை காலத்தில் வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும்: தரமான குழாய்கள் அமைப்பது அவசியம்
/
கோடை காலத்தில் வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும்: தரமான குழாய்கள் அமைப்பது அவசியம்
கோடை காலத்தில் வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும்: தரமான குழாய்கள் அமைப்பது அவசியம்
கோடை காலத்தில் வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும்: தரமான குழாய்கள் அமைப்பது அவசியம்
ADDED : மே 03, 2024 04:57 AM
சிவகாசி - மாவட்டத்தில் நகர், கிராமப் பகுதிகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். கோடை காலம் துவங்கிய நிலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க குழாய்களை தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் நகர், கிராமப் பகுதிகளில் தாமிரபரணி, மானுார், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. மேலும் குடிநீர் ஆதாரத்தை பொறுத்து அந்தந்த பகுதிகளில் போர்வெல் அமைக்கப்பட்டு மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு வினியோகம் செய்யப்படும் குடிநீர் பல இடங்களில் குழாய் உடைந்ததால் வீணாகி ரோட்டில் ஓடுகின்றது. நகர்ப்பகுதிகளில் பொதுவாக 10 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்பட்டும் குடிநீர் போதவில்லை.
ஒரு சில நகரங்களில் மாதம் ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் அதிகளவு பற்றாக்குறை ஏற்படுகின்றது. . கிராம பகுதியில் போதுமான அளவு வினியோகம் இருந்தாலும் குழாய்கள் உடைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படத்தான் செய்கிறது. தற்சமயம் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. குழாய்கள் அடிக்கடி உடைவதற்கு முக்கிய காரணமே தரமில்லாத குழாய்கள் அமைக்கப்படுவதுதான்.
மேலும் குழாய்களை அதிக ஆழத்தில் பதிக்காமல் மேலோட்டமாக பதிப்பதும் முக்கிய காரணமாக உள்ளது. ஏனெனில் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் செல்லும்போது குழாய்கள் உடைந்து விடுகின்றது. எனவே தரமான குழாய்களை அதிக ஆழத்தில் பதித்து சேதமடையாமல் பாதுகாத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.