sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிரதமர் குடியிருப்பு திட்டத்தில்ரூ. 79 லட்சம் கையாடல் வழக்கு; தாய் சரண், மகள், உறவினர் கைது

/

பிரதமர் குடியிருப்பு திட்டத்தில்ரூ. 79 லட்சம் கையாடல் வழக்கு; தாய் சரண், மகள், உறவினர் கைது

பிரதமர் குடியிருப்பு திட்டத்தில்ரூ. 79 லட்சம் கையாடல் வழக்கு; தாய் சரண், மகள், உறவினர் கைது

பிரதமர் குடியிருப்பு திட்டத்தில்ரூ. 79 லட்சம் கையாடல் வழக்கு; தாய் சரண், மகள், உறவினர் கைது


ADDED : ஜூன் 25, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் ரூ. 79 லட்சம் கையாடல் செய்த ஒப்பந்த பணியாளரான மகள் ரேவதி, உறவினர்ராம்மனோகரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஊராட்சி செயலாளரான தாய் தெய்வானை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2021 -- 22ம் ஆண்டிற்கான பயனாளிகளை தேர்ந்தெடுத்து, விடுவிப்பு தொகை வழங்குவது 2023 மே 28 முதல் அனுப்பப்பட்டு வந்தது.

2024 மே 6 ல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் பெறப்பட்ட மின் அஞ்சல் செய்தியில் மூன்று நபர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம் தொழில்நுட்ப கோளாறால் இரு தடவை செலுத்தப்பட்ட தொகை திருப்பி வசூல் செய்ய கோரப்பட்டது. மே 7 ல் கூடுதல் பொறுப்பு வகித்த அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம் என்பவரிடம் தகவல் கூறி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமியிடம் இருந்து ரூ. 1 லட்சம் பணத்தை வசூல் செய்ய கூறினார். மதியம் 12:30 மணிக்கு ரூ. 1 லட்சம் பணத்துடன் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலரை பார்த்துள்ளார். குறுகிய நேரத்தில் பணம் வந்த விபரம் பற்றி கேட்ட போது ரேவதி கொடுத்ததாக கூறினார்.

ரேவதி 2020 முதல் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் தற்காலிக கணினி உதவியாளராக அவுட்சோர்சிங் மூலம் பணிபுரிந்து வந்தார். இவரது தாய் தெய்வானை சடையம்பட்டி ஊராட்சி செயலராக பணிபுரிகிறார். இது குறித்து மே 18 ல் ரேவதியிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக கூறினார். அதன் பின் பணிக்கு வராததால் சந்தேகம் எழுந்து 2023 ஆகஸ்ட் முதல் பிரதமர் வீடு கட்டும் திட்ட தொகையை சரிபார்க்கும் போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 76 பயனாளிகளின் பெயர்களை பயன்படுத்தி ரேவதி, தாய் தெய்வானையின் ஆலோசனைப்படி அவரது மகன், உறவினர்கள்ராம்மனோகர், ராம்கிருஷ்ணன் ஆகியோரின் வங்கி கணக்கில் வரவு வைத்து ரூ. 79 லட்சத்து 63 ஆயிரத்து 505 வரை மோசடி செய்தது தெரிந்தது.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், மகள் ரேவதி, ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவினர் ராம்மனோகரின் வங்கி கணக்கு மூலம் ரூ. 28 லட்சத்தை பரிமாற்றம் செய்து எடுத்ததை கண்டறிந்தனர். தென்காசியில் பதுங்கி இருந்த ரேவதி, மனோகரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தாய் தெய்வானைராஜபாளையம்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.






      Dinamalar
      Follow us