/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கெட்டுப்போன மீன்களை பதப்படுத்தி விற்பனை: அதிகாரிகள் ஆய்வு தேவை அதிகாரிகள் ஆய்வு தேவை

ADDED : ஆக 05, 2024 07:29 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வாங்கி வரப்படும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் தடவி பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வுகள் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியாப்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய நகர் பகுதிகள், சுற்றிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்படும் மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
மீன்கள் கெட்டு போகாமல் இருக்க ஐஸ் பார்களை வாங்கி, அதில் பார்மலின் தடவி பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். மேலும் புதன், சனிக்கிழமைகளில் மீன்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சில வியாபாரிகள் முந்தைய நாள்களில் விற்பனையாகாத மீன்களை கெட்டுப்போன பின்பும் பதப்படுத்தி மக்கள் அதிகமாக வரும் சமயத்தில் கலந்து விற்பனை செய்து விடுகின்றனர். இதை வாங்கி உண்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இது போன்று கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மீன்கள் விற்பனை செய்யப்படும் பகுதிகளில் அடிக்கடி உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.