ADDED : செப் 15, 2024 12:10 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே கே.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் 80. இவருக்கு ராஜாமணி 58, கணேசன் 55, என 2 மகன்கள் உள்ளனர். நீண்ட காலமாக தந்தை மகன்களுக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இம்மானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் அன்னதானம் நடந்தது.
இதில் பங்கேற்று வீடு திரும்பிய கணேசனிடம் தந்தை சோலையப்பன், அண்ணன் ராஜாமணி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணன் ராஜாமணி அரிவாளால் தம்பி கணேசனை தலை, கழுத்து உட்பட பகுதிகளில் வெட்டினார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சோலையப்பன் புகாரில் மகன் கணேசன் உட்பட 6 பேர் மீதும், கணேசன் கொடுத்த புகாரில், தந்தை சோலையப்பன், அண்ணன் ராஜாமணி உட்பட 5 பேர் மீது திருச்சுழி போலீசார் வழக்கு பதிந்தனர். ராஜாமணி, கருப்பையா ஆகிய இருவரை கைது செய்தனர்.