/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் காயல்குடி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற எதிர்ப்பு
/
ஸ்ரீவி.,யில் காயல்குடி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற எதிர்ப்பு
ஸ்ரீவி.,யில் காயல்குடி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற எதிர்ப்பு
ஸ்ரீவி.,யில் காயல்குடி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற எதிர்ப்பு
ADDED : பிப் 23, 2025 05:53 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டியில் காயல்குடி ஆற்றின் கரையில் ஆக்கிமிரப்பு செய்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆக்கிரப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் காயல்குடி ஆற்றின் கரைப்பகுதியை அரசு உதவி பெறும் காளீஸ்வரி பள்ளி மற்றும் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை அகற்றக்கோரியும், 2024 ஜூன் மாதம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து,ஆக்கிரப்புகள் இருப்பதை உறுதி செய்து, அதனை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அவர்கள் அகற்றததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று காலை 10:30 மணிக்கு தாசில்தார் பாலமுருகன் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ஆனால் ஆக்கிரப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். அரசுத் துறை அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
தகவலறிந்த வந்த ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், இப்பிரச்னை குறித்து கலெக்டரிடம் தான் பேசிக் கொள்வதாகவும், ஆக்கிரப்பு அகற்றத்தை நிறுத்தி வைத்து விட்டு கிளம்பிச் செல்ல செல்லுமாறு அதிகாரிகளிடம் கூறினார் அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர்.
தங்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக வருவாய் துறை சார்பில் வன்னியம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.