நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து விபத்தில் காயமடைந்த மூவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3லட்சம் வழங்கப்பட்டது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 8 பேருக்கும், தாட்கோ மூலம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 91 பேருக்கு ரூ.45.50 லட்சத்தில் மானிய தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இனாம் கரிசல்குளத்தில் ரூ.1.55 கோடிக்குகட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.6.69 லட்சத்திற்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா பங்கேற்றனர்.