/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
''ரூ.1 லட்சம் கோடி கனிமவளத்துறை மூலம் ஆண்டுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கும்''
/
''ரூ.1 லட்சம் கோடி கனிமவளத்துறை மூலம் ஆண்டுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கும்''
''ரூ.1 லட்சம் கோடி கனிமவளத்துறை மூலம் ஆண்டுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கும்''
''ரூ.1 லட்சம் கோடி கனிமவளத்துறை மூலம் ஆண்டுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கும்''
ADDED : மே 05, 2024 06:04 AM
காரியாபட்டி, : ''முறையாக செயல்பட்டால் கனிமவளத்துறை மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும், என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்தார்.
காரியாபட்டி ஆவியூரில் கல்குவாரியில் வெடி மருந்து கோடோனில் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையிலான 10 பேர் கொண்ட உண்மை அறியும் குழுவினர் குவாரியில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து முகிலன், கூறியதாவது: காரியாபட்டி ஆவியூரில் செயல்பட்ட கல்குவாரியில் 300 மீட்டர் தூரத்தில் தற்காலிக குடியிருப்பு கூட இருக்கக் கூடாது என்பதுதான் விதி. ஆனால் 200 மீட்டர் தூரத்தில் மிக அபாயகரமான வெடி மருந்து கோடோனுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
50 அடி தூரத்திற்கு மின் கம்பம் இருக்கக் கூடாது. 10 அடி தூரத்தில் மின்கம்பம் உள்ளது. 300 மீட்டர் தூரத்திற்குள் டவர் லைன் இருக்கக் கூடாது. 100 மீட்டர் தூரத்தில் டவர் லைன் செல்கிறது. வெடி மருந்தை நாணல் வெடி மருந்து தான் வெடிக்க வேண்டும். அதுவும் மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள் வெடிக்க வேண்டும். 7 ஏக்கரில் உள்ள குவாரிக்கு 180 துளைகள் இட்டு தான் வெடிகள் வெடிக்க வேண்டும். 250க்கும் மேற்பட்ட துளைகள் இட்டு வெடிகள் வெடித்துள்ளனர். அளவுக்கு அதிகமான கனிமங்களை வெட்டி எடுத்ததனால் கனிம கொள்ளை நடந்துள்ளது. முறையாக செயல்பட்டால் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.
98ஆயிரத்து 500 கோடிக்கு மேல் கணக்கில் வராமல் கல்குவாரி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்பாவி தொழிலாளர்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர். இதனை தடுக்க அடிக்கடி ஆய்வு செய்து முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.