ADDED : ஜூன் 24, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, ஜூன் 25 -
சிவகாசி பகுதிகளில் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் தெரு நாய்களுக்கு் வெறிநோய் தடுப்பூசி 2 வது கட்ட முகாம் நடந்தது.
திருத்தங்கல் முத்துமாரி நகரில் துவங்கிய முகாமை மேயர் சங்கீதா, கமிஷனர் கண்ணன் துவக்கி வைத்தனர். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர்கள் சர்மிளா, பழனிசாமி, கால்நடை டாக்டர் யுவராஜ் அனிமல் கேர் டிரஸ்ட் ஷியாம்ராஜா குழுவினரால் 40 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கமிஷனர் கூறுகையில், தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற உள்ள முகாமில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். ஏற்பாடுகளை மாநகர நல அலுவலர் ஸ்ரீதேவி , திருப்பதி, சுரேஷ் ,சத்யராஜ் ராமச்சந்திரன் செய்தனர்.
