ADDED : ஜூன் 24, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, ஜூன் 25 -
சிவகாசி பி.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்விக் குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மகேஸ்வரி வரவேற்றார். கணிதத்துறை தலைவர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மாணவர் புல தலைவர் மாரிசாமி, ஆராய்ச்சி மேம்பாட்டு துறை தலைவர் சாகுல் ஹமீது வாழ்த்தினர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கல்லுாரி முதல்வர் கண்ணன் பேசினார். கணினி அறிவியல் துறை தலைவர் தேவிகா நன்றி கூறினார்.
