
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மாசி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா விழா நடந்தது. பத்து நாள் நடைபெறும் விழாவில் சுவாமி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று தெப்ப திருவிழாவை முன்னிட்டு காலை முதல் கோயில் பின்புறம் உள்ள மானசரோவர் குளத்தில் இரவு 7:00 மணிக்கு மேல் கோயிலில் இருந்து வாத்தியங்கள் முழங்க மீனாட்சி , சொக்கர் ரதத்தில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம்கோ குழுமத்தினர் செய்திருந்தனர்.