/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பில் ரவுடிகள் கண்காணிப்பு
/
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பில் ரவுடிகள் கண்காணிப்பு
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பில் ரவுடிகள் கண்காணிப்பு
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பில் ரவுடிகள் கண்காணிப்பு
ADDED : ஏப் 04, 2024 11:40 PM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் லோக்சபா தேர்தலின் போது அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க ரவுடிகளை போலீசார் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.
தென்காசி லோக்சபா தொகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் 183 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. இதில் 17 ஓட்டுச்சாவடி மையங்கள் பதட்டமானவை என போலீசார் கணித்துள்ளனர்.
இதனால் வழக்கமான ஓட்டு சாவடி மையங்களிலும், அடிக்கடி தகராறு ஏற்படும் கிராமங்கள், நகர் பகுதி தெருக்களில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக உள்ளூர் போலீசார் மட்டுமின்றி நாகலாந்து மாநில துணை ராணுவ படையினரும்ரோந்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் கூமாபட்டி, வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்நகர் மற்றும் தாலுகா மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி ஆகிய போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர்.
இவர்களால் பொது அமைதிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் தடுக்கவும், அசம்பாவிதங்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி ரவுடி பட்டியலில் உள்ளவர்களை தினமும் இரவு, பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் நடமாட்டங்களை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் மிக தீவிரமாககண்காணித்து வருகின்றனர்.

