/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் 3 துறைகளின் அலட்சியம் பள்ளமான ரயில்வே ஸ்டேஷன் ரோடு

ADDED : மே 08, 2024 06:19 AM

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே, நெடுஞசாலைத்துறை, நகராட்சி துறைகளின் அலட்சியத்தால் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பள்ளமாக மாறி போக்குவரத்திற்கு பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.
நகரில் இருந்து ரயில்வே பீடர் ரோடு வழியாகவும், மதுரை ரோட்டில் இருந்து மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ரோடு வழியாகவும் ஸ்டேஷனுக்கு மக்கள் வந்து செல்வர். ரோட்டின் ஒரு பகுதி ரயில்வே துறைக்கு கட்டுபாட்டிலும், மற்றொரு பகுதி நெடுஞ்சாலை துறை, நகராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்த ரோட்டை 3 துறைகளும் பராமரிக்காமல் கண்டு கொள்ளாமல் விட்டதால், சேதமடைந்து குண்டும், குழியுமாகவும், கிடங்காகவும் மாறிவிட்டது.
இதனால் பயணிகள் ரயில்வே ஸ்டேஷனுக்கு வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் கஷ்டப்பட்டு தான் ஸ்டேஷனை அடைய முடிகிறது. ஸ்டேஷனுக்கு வருவதற்குள் பயணிகள் ஒரு வழியாகி விடுகின்றனர்.
தற்போது ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்வதால் அவர்களின் நலன் கருதி, 3 துறைகளும் இணைந்து இந்த ரோட்டை புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் விளக்கு வசதியும் ஏற்படுத்த வேண்டும்.