/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குறிச்சியில் அரசு பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழை நீர்
/
கல்குறிச்சியில் அரசு பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழை நீர்
கல்குறிச்சியில் அரசு பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழை நீர்
கல்குறிச்சியில் அரசு பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழை நீர்
ADDED : ஆக 22, 2024 02:19 AM

காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் பெய்த கன மழைக்கு கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை மழை நீர் சூழ்ந்ததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
காரியாபட்டி பகுதியில் சில தினங்களாக தொடர்ந்து இடி, மின்னல்,பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 1.72 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நீர் நிலைகள் ஓரளவிற்கு நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் காரியாபட்டி கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது. பள்ளி அருகில் கண்மாய், ஊருணி நிரம்பி, மழை நீர் வெளியேற வழியின்றி பள்ளி வளாகத்தை சூழ்ந்தது. காட்டுப் பகுதிகளில் இருந்து வரும் வரத்து ஓடை மழை நீரும் வளாகத்தை சூழ்ந்ததால் குளம் போல் தேங்கியது.
நேற்று காலை பள்ளிக்கு வந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழங்கால் அளவு தண்ணீர் இருந்ததால் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்கப்பட்டது. 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்தப்பட்டது. பெற்றோர் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
தாசில்தார் மாரீஸ்வரன் பார்வையிட்டு மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று வழக்கம் போல் பள்ளி செயல்படும்.