/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை
/
மழையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை
மழையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை
மழையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 27, 2024 05:54 AM

ராஜபாளையம், : ராஜபாளையம் வட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 1500 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் அறுவடை பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர் ஆதாரத்தை வைத்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை சுற்றியுள்ள கண்மாய்களில் அறுவடை பணிகள் முழுமை அடைந்து அடுத்த கட்ட நடவு பணிகள் தொடங்கியுள்ளன.
ஆனால் இதற்கு 20 நாள் தாமதித்து ராஜபாளையம் கருங்குளம், அயன் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய், கோட்டை, கூனங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அறுவடை உச்சத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில் 3000க்கும் அதிகமான ஏக்கர் நெல் விவசாயத்தில் பாதி இடங்களில் அறுவடை முடிந்த நிலையில் பணிகள் தொடர் மழையால் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து இசக்கி விவசாயி: கோடை சாகுபடியில் நெல் அறுவடை பாதி முடிந்துள்ள நிலையில் 1500 ஏக்கர் பரப்பளவிற்கு பணிகள் பாதித்துள்ளன. ஐந்து நாட்களாக தொடர் மேக மூட்டத்துடன் விட்டு விட்டு மழை பெய்து வருவதுடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கி கனமான சாரல் மழை தற்போது காற்றுடன் தொடர்கிறது.
இதனால் விளைந்துள்ள நெல், பயிரிலேயே முளைப்புத்திறனை அடைவதுடன் நிலத்தில் உதிர்ந்து, மண்ணில் சாய்ந்து பாதிப்பு ஏற்படும் நிலையை அடைந்துள்ளது. மழையில் சிக்கிய நெற்பயிர்கள் தரம் குறைந்து போவதால் வியாபாரிகளிடம் தகுந்த விலையும் கிடைக்காது. இன்னும் சில நாட்கள் மழை தொடரும் என்பதால் கவலை அடைந்துள்ளோம்.