/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் பகுதியில் ராம நவமி கொண்டாட்டம்
/
ராஜபாளையம் பகுதியில் ராம நவமி கொண்டாட்டம்
ADDED : ஏப் 18, 2024 04:50 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார பெருமாள் கோயில்களில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜை அலங்காரம் நடந்தது.
பழைய பாளையம் ராமசாமி கோயிலில் அதிகாலை முதல் சங்கல்பம் பாராயண வழிபாடு நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் சுவாமி வீதி உலா மாடசாமி கோயில் தெரு முத்தாலம்மன் கோயில் தெரு பெரிய கடை பஜார் வழியே கோயிலை அடைந்தது.
* கோதண்ட ராமசாமி கோயிலில் கூட்டு பாராயணம் ராம நாம பஜனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* ஷீரடி சாயிபாபா கோயிலில் 108 வலம்புரி சங்கு ஜெபம், சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது.
* பிரம்மானந்த பஜனைமடம் , பெரிய கடை பஜார் ஹரிஹர பெருமாள் கோயில், ஆதி வழி விடு விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

