ADDED : மே 10, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் பல்கலை கழக தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை காமராஜ் பல்கலை தேர்வில் தரவரிசை பட்டியல் 15 மாணவிகள் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2024 நவம்பரில் நடந்த பல்கலை தேர்வில் கணித துறையைச் சேர்ந்த 13 மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், கலை கல்லூரி செயலர் டாக்டர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கர நாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், கலை கல்லூரி முதல்வர் தில்லை நடராஜன், துணை முதல்வர் பெளர்ணா ஆகியோர் பாராட்டினர்.