/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முழுவீச்சில் செயல்படுகிறதா ரேஷன் கடை விழிப்புணர்வு குழு கண்காணிப்பு அவசியம்
/
முழுவீச்சில் செயல்படுகிறதா ரேஷன் கடை விழிப்புணர்வு குழு கண்காணிப்பு அவசியம்
முழுவீச்சில் செயல்படுகிறதா ரேஷன் கடை விழிப்புணர்வு குழு கண்காணிப்பு அவசியம்
முழுவீச்சில் செயல்படுகிறதா ரேஷன் கடை விழிப்புணர்வு குழு கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜூன் 29, 2024 04:55 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விழிப்புணர்வு குழு நியமிக்கப்பட்ட நிலையில் அவை முழுவீச்சில் செயல்படுகிறதா என்ற கேள்வி உள்ளது.
மாவட்டத்தில் 966 கூட்டுறவு ரேஷன் கடைகளும், 35 நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடைகளும் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், அதன் வசதிகளை மேம்படுத்தவும் விழிப்புணர்வு குழு அமைக்க அரசு அறிவுறுத்தியது.
மக்கள் குறைகள், தரத்தில் ஏதேனும் பிரச்னை இருப்பின் இந்த குழுக்கள் மூலம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம். இந்த குழுவில் ஓய்வு அரசு ஊழியர் ஒருவர், எஸ்.சி., பி.சி., பெண் என 5 முதல் 6 பேர் வரை நியமிக்கப்படுவர்.
மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முன்பிருந்தே இந்த குழு செயல்பட்டு வந்தாலும், நாளடைவில் அதன் செயல்பாடு மங்கி தான் வந்துஉள்ளன. இதனால் தற்போது 2023ல் இக்குழுக்கள்புதிதாக அமைக்கப்பட்டன. புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இக்குழுக்கள் முழு செயல்பாட்டில் தற்போதும் உள்ளதா என்ற கேள்வி உள்ளது.
ஜூன் மாதம் முழுவதும் துவரம் பருப்பு கிடைக்காமல் ஏழை, எளிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது லோடு வந்துள்ள நிலையில், நிறைய கடைகளுக்கு இன்னும் பருப்பு போய் சேர வேண்டி உள்ளது.
இது தொடர்பாக இந்த குழுக்கள் எத்தனை புகார்களை அனுப்பி உள்ளது. மேலும் மக்களிடம் இந்த பொருள் இல்லாததால் என்னென்ன சிரமம் என கேட்டு தெரிந்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துஉள்ளதா. இக்குழுக்களை நியமிக்கும் போதே தெரிந்தவர்களை கொண்டு, பெயருக்கு நியமிப்பதாக புகார் இருந்தது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடை விழிப்புணர்வு குழுக்களை முழு அளவில் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.