/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்விபத்து தடுக்க ஆர்.சி.டி., கருவி மேற்பார்வை பொறியாளர் தகவல்
/
மின்விபத்து தடுக்க ஆர்.சி.டி., கருவி மேற்பார்வை பொறியாளர் தகவல்
மின்விபத்து தடுக்க ஆர்.சி.டி., கருவி மேற்பார்வை பொறியாளர் தகவல்
மின்விபத்து தடுக்க ஆர்.சி.டி., கருவி மேற்பார்வை பொறியாளர் தகவல்
ADDED : ஆக 21, 2024 06:30 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வீடு, கடைகளில் மின் சாதனங்களில் மின் கசிவால் வரும் மின் விபத்தை தவிர்க்க மின் இணைப்புகளில் மின்கசிவு தடுப்பு கருவி (ஆர்.சி.டி.,) பொருத்த வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பழுதான சுவிட்சுகள், ஈரமான கைகளால் மின்சாதனங்களை இயக்கும் போது ஏற்படும் மின்கசிவை, மின்கசிவு தடுப்பு கருவி கண்டறிந்து மின் விநியோகத்தை நிறுத்தி விடும். தற்போது புதிய மின் இணைப்புகளுக்கு இக்கருவி பொருத்திய பின்பு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே மின் இணைப்பு பெற்ற பயன்படுத்தப்படும் மின் இணைப்புகளில் இக்கருவியை பொருத்தி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம். கட்டடங்களுக்கு அருகே மின்பாதை இருப்பின் போதிய இடைவெளியை உறுதி செய்தல், அது போன்று இல்லாத சமயத்தில் மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
மின்பாதை அருகே நீளமான பொருட்கள் கையாளுவதை தவிர்த்தல், கட்டுமான பணியின் போது மின்கம்பிகள் இருந்தால் போதிய இடைவெளி இருப்பதை உறுதி செய்து பாதுகாப்புடன் பணி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.