/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் விதி மீறி இயங்கிய 4 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
/
சிவகாசியில் விதி மீறி இயங்கிய 4 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
சிவகாசியில் விதி மீறி இயங்கிய 4 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
சிவகாசியில் விதி மீறி இயங்கிய 4 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
ADDED : மே 23, 2024 02:47 AM

சிவகாசி: சிவகாசி பகுதியில் மினி சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட சரவெடிகள், கோடவுனில் பதுக்கி வைத்திருந்த சரவெடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விதி மீறி இயங்கிய 4 பட்டாசு ஆலைகளின் தற்காலிக உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
சிவகாசி தாசில்தார் வடிவேல், தீப்பெட்டி, தொழிளார் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் சிவகாசி சுற்று பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் குறித்து நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது சிவகாசி அருகே தச்சகுடியில் ஹரிஹரனின் ஆர்.ஆர்.பைரோடெக் என்ற பட்டாசு ஆலையில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்தது, அனுமதியின்றி செட் அமைத்து பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தனர்.
சிவகாசி அருகே நெடுங்குளம் பகுதியில் வந்த மினி சரக்கு வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து டிரைவரிடம் விசாரித்ததில், நதிக்குடியில் உள்ள வைரமுத்துக்குமாரின் வி.ஜி.ஆர் பட்டாசு ஆலையில் இருந்து நெடுங்குளத்தில் உள்ள சித்தி விநாயகா டிரான்ஸ்போர்ட் குடோனில் இருப்பு வைக்க கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் , குடோனில் ஆய்வு செய்தனர். அங்கும் தடை செய்யப்பட்ட சரவெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கோடவுனிற்கு சீல் வைக்கப்பட்டது. எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல் கங்கர்செவல் கிராமத்தில் திவ்யா பட்டாசு ஆலையில், வேறு தொழிற்சாலையின் லேபிளைப் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்தது, அனுமதியின்றி செட் அமைத்து, அதிகளவு வெடிபொருட்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது.
மேலும் விஜயலட்சுமி பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்தது, அதிகளவு பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. தங்கவேல் சக்கரவர்த்தி பட்டாசு ஆலையில் மணி மருந்து அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தனர்.

