/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விதிமீறி இயங்கிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
/
விதிமீறி இயங்கிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
விதிமீறி இயங்கிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
விதிமீறி இயங்கிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
ADDED : மே 08, 2024 06:16 AM
சிவகாசி, : சிவகாசி பகுதியில் விதிமீறி இயங்கிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்த அதிகாரிகள், ஒரு பட்டாசு கடைக்கு சீல் வைத்தனர்.
சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் தீப்பெட்டி தொழிலாளர் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி, கிழக்கு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, சகாயம் வி.ஏ.ஓ., ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாரிமுத்துக்கு சொந்தமான தங்கமணி பட்டாசு ஆலையில் அரசால் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்யப்பட்டது.
மேலும் பட்டாசு ஆலைக்கு எதிரே அவருக்கு சொந்தமான பட்டாசு கடையிலும் சரவெடி தயாரிக்கப்பட்டது. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், பட்டாசு ஆலைக்கு தற்காலிக உரிமம் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.
இதேபோல் ஒண்டிப்புலி நாயக்கனுாரில் ரகுராமனுக்கு சொந்தமான ரகுராமன் பட்டாசு ஆலையில் அரசால் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்யப்பட்டது.
மேலும் அதிக ஆட்களை கொண்டு மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது. இந்த ஆலைக்கும் தற்காலிகமாக உரிம ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.