/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கர்ப்பப்பையில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றம்
/
கர்ப்பப்பையில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றம்
ADDED : மே 07, 2024 05:02 AM
காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 2.கி., கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.
திருச்சுழி மிதிலைகுளத்தை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் 45. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
ஸ்கேன் செய்ததில் கர்ப்பப்பையில் கோளாறும், கருமுட்டையில் மிகப்பெரிய கட்டியும் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வெள்ளையம்மாள் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவர் மனோகரன் தலைமையில், மருத்துவர்கள் வெங்கடேஸ்வரன் மயக்கவியல் நிபுணர் ஜெயராணி அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்தனர்.
கர்ப்ப பை, 2கி., கருமுட்டை கட்டியை அகற்றினர். நோயாளி நலமாக உள்ளார். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கர்ப்ப பை, பித்த பை, குடல்வால், குடல் இறக்கம் போன்ற பிரச்னைகளுக்கு லேபராஸ்கோப் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.