/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிழவனேரியில் சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
/
கிழவனேரியில் சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
ADDED : ஜூன் 16, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் பலத்த காற்றுக்கு மழைக்கு கிழவனேரியில் சாய்ந்த மின்கம்பத்தை மின்வாரியத்தினர் சீரமைத்தனர்.
காரியாபட்டி கிழவனேரியில் சில நாட்களுக்கு முன் பலத்த காற்று இடியுடன் கனமழை பெய்தது.
அங்குள்ள கண்மாய் கரையில் இருந்த மின்கம்பம் சாய்ந்து சேதம் அடைந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஒரு பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டு, மற்றொரு பகுதிக்கு மின்சாரம் இன்றி மக்கள் சிரமப்பட்டனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் சாய்ந்த மின்கம்பத்தை மின்வாரியத்தினர் சீரமைத்ததையடுத்து அக்கிராமத்தினர் நன்றி தெரிவித்தனர்.