/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜல் ஜீவன் இணைப்பு வழங்க கோரிக்கை
/
ஜல் ஜீவன் இணைப்பு வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 27, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் ம.நீ.ம., மாவட்ட செயலாளர் காளிதாஸ், கலெக்டர் ஜெயசீலனுக்கு அனுப்பிய மனு: விருதுநகர் பாவாலி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.
பாவாலி வடக்கு தெருவில் இருந்த பொது குடிநீர் குழாயை ஜல் ஜீவன் பணிக்காக 6 மாதங்கள் முன் அகற்றிவிட்டனர். அங்குள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இணைப்பு வழங்க எந்த பணியும் நடக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

