/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சென்னை ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
/
சென்னை ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
சென்னை ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
சென்னை ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
ADDED : மே 29, 2024 07:36 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஜூன் 20 வரை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் மிகவும் அதிகளவில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை உள்ளது. இரவு நேர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள், பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயங்கும் ரயில்கள் எப்போதும் நிரம்பி வழிகின்றன.
கோடை விடுமுறைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் மீண்டும் சென்னை திரும்ப ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் தென் மாவட்டத்திலிருந்து இயங்கும் அனந்தபுரி, கன்னியாகுமரி, முத்து நகர், நெல்லை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பொதிகை, சிலம்பு, கொல்லம், பாண்டியன், வைகை, குருவாயூர், தாம்பரம்-- செங்கோட்டை, வந்தே பாரத், தேஜஸ் என அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலையே உள்ளது.
முழுமையாக 14 ஏசி பெட்டிகள் கொண்ட தாம்பரம் -கொச்சு வேலி ரயிலிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை காணப்படுகிறது.
எனவே, கன்னியாகுமரி, செங்கோட்டை, மதுரை, ராமேஸ்வரம், பழனி ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் வகையில் சிறப்பு ரயில்கள், முழுக்க, முழுக்க இருக்கைகள் மட்டுமே கொண்ட ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.