ADDED : ஜூன் 27, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே வெற்றிலையூரணி விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானை நேற்று காலை சிவகாசி தீயணைப்பு துறையினர் மானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இரவு நேரத்தில் உணவு, நீர் தேடி வந்த ஆண் மான் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம். மானுக்கு 2 வயது இருக்கும்.
மீட்கப்பட்ட மான் மருத்துவ சோதனைக்கு பின் வனப்பகுதியில் விடப்பட்டது, என்றனர்.