/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்தவெளியில் குப்பை கொண்டு செல்வதால் விபத்து அபாயம்
/
திறந்தவெளியில் குப்பை கொண்டு செல்வதால் விபத்து அபாயம்
திறந்தவெளியில் குப்பை கொண்டு செல்வதால் விபத்து அபாயம்
திறந்தவெளியில் குப்பை கொண்டு செல்வதால் விபத்து அபாயம்
ADDED : மார் 24, 2024 01:04 AM

விருதுநகர் : விருதுநகரில் திறந்தவெளியில் குப்பை கொண்டு செல்வதாலும் அவை காற்றில் பறப்பதாலும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் 2023 ஏப். முதல் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களே குப்பையை அள்ளி வருகின்றனர். நகராட்சியின் நிரந்தர ஊழியர்கள் நுண்ணுரமாக்கல் மையங்களிலும், வாறுகாலை சுத்தம் செய்யவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர்.
இது தவிர நகராட்சி வாகனங்கள் வாடகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மாதங்களாக குப்பை அள்ளும் பணிகள் மந்தமாகி வருகின்றன. குறிப்பாக பேட்டரி வண்டிகள் பழுதாகி தள்ளுவண்டியை பயன்படுத்தும் சூழல் உள்ளது.
இந்நிலையில் குப்பையை மொத்தமாக ஓரிடத்தில் இருந்து உரமாக்கல் மையங்களுக்கு எடுத்து செல்லும் மினிலாரிகளும் மோசமான நிலையில் இருக்கின்றன. அவற்றை தார்பாய் போட்டு மூடிய படி எடுத்து செல்வது கிடையாது. இதனால் குப்பை காற்றில் பறந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. காலை, மாலை நேரங்களில் செல்லும் இந்த வண்டிகளின் பின்னால் யாராவது சென்று விட்டால் நிச்சயம் சட்டை கரையாகி விடும். எனவே குப்பையை கொண்டு செல்லும் இந்த வண்டிகள் தார்ப்பாய் பயன்படுத்தவும், குப்பையை மூடிய படி எடுத்த செல்ல அறிவுறுத்த வேண்டும்.

