/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரடு முரடு ரோடால் விபத்து அபாயம்
/
கரடு முரடு ரோடால் விபத்து அபாயம்
ADDED : மே 01, 2024 07:44 AM

விருதுநகர் : விருதுநகர் கவுசிகா ஆத்துப்பாலம் அருகே நிலா நகர் செல்லும் கரடு முரடு ரோடால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் சாத்துார் ரோடு கவுசிகா ஆத்துப்பாலத்தில் கீழ்ப்பகுதியில் நிலா நகர் செல்கிறது. இப்பகுதி ஊரகப்பகுதியாக இருப்பதால் சரியான ரோடு வசதியில்லை. முன்பு போட்ட ரோடுகளும் பெயர்ந்து தற்போது ஜல்லிக்கற்கள் தான் குவிந்து காணப்படுகின்றன. புதிதாக இவ்வழியில் செல்வோர் இடறி விழுந்து விபத்தை சந்திப்பர்.
இப்பகுதியில் ரோடு போட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இப்பகுதியில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாறி கருவேல முட்கள் இருக்கும் பகுதிக்குள் செல்லும் அபாயம் உள்ளது. விஷப்பூச்சிகளும் ஆங்காங்கே நடமாடுகின்றன.