/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரம் கிடக்கும் புதிய மின் கம்பங்களால் விபத்து அபாயம்
/
ரோட்டோரம் கிடக்கும் புதிய மின் கம்பங்களால் விபத்து அபாயம்
ரோட்டோரம் கிடக்கும் புதிய மின் கம்பங்களால் விபத்து அபாயம்
ரோட்டோரம் கிடக்கும் புதிய மின் கம்பங்களால் விபத்து அபாயம்
ADDED : மே 09, 2024 04:59 AM

விருதுநகர்: விருதுநகரில் ரோட்டோரம் கிடக்கும் புதிய மின்கம்பங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் தாலுகா அலுவலகம் அருகே ரோட்டோரம் புதிய மின்கம்பங்கள் நடுவதற்காக போட்டு வைக்கப்பட்டுள்ளன. இவை ஓரமாக இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால் இரவு நேரம் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை.
குறிப்பாக பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அதே நேரம் இந்த சர்வீஸ் ரோட்டிற்குள் நுழையும் வாகனங்களும் ஏராளம். சற்று தடுமாறினால் போட்டு வைக்கப்பட்டுள்ள இந்த மின்கம்பங்களில் தடுமாறி வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது.
இதே போன்று தான் மாவட்டத்தின் பல பகுதிகளில் கம்பங்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்கம்பம் சேதம் அடைந்தால் உடனடியாக அடுத்த மின்கம்பம் நட இந்த முயற்சி உதவி அளிக்கும்.
ஆனால் ரோட்டோரம் போட்டிருப்பதால் விபத்துக்கு தான் வழிவகுக்கும். அருகில் உள்ள அரசு அலுவலகங்களில் ஓரமாக இருப்பு வைக்க மின்வாரியத்தினர் கேட்டு கொண்டால் சிரமம் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. விபத்து அபாயமும் தவிர்க்கப்படும்.