/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெடுஞ்சாலையில் கடமைக்கு பக்கவாட்டு கழிவு மண் ஒதுங்கும்போது விபத்து அபாயம்
/
நெடுஞ்சாலையில் கடமைக்கு பக்கவாட்டு கழிவு மண் ஒதுங்கும்போது விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் கடமைக்கு பக்கவாட்டு கழிவு மண் ஒதுங்கும்போது விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் கடமைக்கு பக்கவாட்டு கழிவு மண் ஒதுங்கும்போது விபத்து அபாயம்
ADDED : ஆக 04, 2024 06:22 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடந்துவரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளின் பக்கவாட்டு ரோடு பராமரிப்பிற்கு கழிவு மண்ணை போட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் முதல் ராஜபாளையம் அடுத்த பகுதி வரையிலான தேசிய நெடுஞ்சாலை மேடு பள்ளங்களாக இருந்தது. நீண்ட கோரிக்கைக்கு பின் புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மெயின் ரோட்டை விட்டு வாகனங்களுக்கு வழி விட விலகி செல்லும் பக்கவாட்டு பகுதியில் மண் கரைந்து இருந்ததால் சிறு வாகனத்தில் வருவோர் ஒதுங்க வழியின்றி இருந்தனர்.
இதனால் ரோடு பணிகளையும் சேர்த்து ரோட்டின் இரண்டு பக்கமும் இரண்டு முதல் நான்கு அடி அகலம் வரை மண் போட்டு சமப்படுத்தும் பணிகளும் நடைபெறுகிறது. ஆனால் கிராவல் மண் போன்ற பலமான மண்ணை போடுவதை விடுத்து ரோட்டை ஒட்டி உள்ள களிமண் முதல் கழிவு மண் என அனைத்தையும் அள்ளிப்போட்டு பரப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுபாஷ்: ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரே நேரத்தில் இரு கனரக வாகனங்கள் கடக்கும் போது டூவீலர் போன்ற சிறிய வாகனங்களில் வருபவர்கள் வழி விடவும், விபத்தினை தவிர்க்கவும் ரோட்டின் பக்கவாட்டு மண் பகுதியில் ஒதுங்கி செல்வதற்காக தான் மண் நிரப்பும் பணி நடைபெறுகிறது. ஆனால் மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு அதன் அருகிலேயே உள்ள பகுதியை தோண்டி பிளாஸ்டிக் குப்பை, களிமண், கரிசல் மண் என இருப்பவற்றை அள்ளிப் போட்டு சென்றுள்ளனர். இவற்றில் வாகன ஓட்டிகள் ஒதுங்கும்போது தடுமாறி விபத்து அபாயம் ஏற்படுகிறது. கனமழைக்கும் இவை கரைந்து விடும் நிலை உள்ளது. கிராவல் மண் உள்ளிட்ட பலமான மண் மூலம் பணிகளை செய்தால் நீண்ட காலம் பிரச்சனையின்றி இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.