/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு சேதம், குடியிருப்பில் பன்றிகள் நடமாட்டம்; சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு ஜெ. நகர் மக்கள் அவதி
/
ரோடு சேதம், குடியிருப்பில் பன்றிகள் நடமாட்டம்; சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு ஜெ. நகர் மக்கள் அவதி
ரோடு சேதம், குடியிருப்பில் பன்றிகள் நடமாட்டம்; சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு ஜெ. நகர் மக்கள் அவதி
ரோடு சேதம், குடியிருப்பில் பன்றிகள் நடமாட்டம்; சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு ஜெ. நகர் மக்கள் அவதி
ADDED : ஆக 20, 2024 06:24 AM

சிவகாசி : தெருக்களில் ரோடு சேதம், குடியிருப்பு பகுதிகளில் மாடுகள், பன்றிகள் நடமாட்டம் என சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு ஜெ. நகர் பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு ஜெ. நகரில் தெருக்களில் ரோடு சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. இப்பகுதியில் ஒரு சில தெருக்களில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரோடு போடப்பட்டது. தற்போது ரோடு சிதைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் மாடுகள், பன்றிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. பன்றிகள் கழிவுகளில் புரண்டு அப்படியே குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால் தொற்று நோய் ஏற்படுகின்றது. மாடுகள் தெருக்களில் நடமாடி வெளியில் நிறுத்தப்பட்டுள்ள டூ வீலர் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்துகிறது.
காலி மனைகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் நிறைந்துள்ளது இதில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடமாக்கி குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். தெருவிளக்குகளும் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் ஒரு சில தெருக்களில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரோடு போடப்பட்டது. ஆனால் வாறுகால் அமைக்காமல் போடப்பட்டதால் தண்ணீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது. மேலும் ரோடு தற்போது சிதைந்து விட்டது. மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளை சுற்றி தேங்கி விடுகிறது. இது கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்துகிறது.
- தண்டபாணி, தொழிலதிபர்.
ஜெ. நகரின் பிரச்னைகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக ரோடு, வாறுகால் அமைக்கப்படும். மாடுகள், பன்றிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- சசிகலா, வார்டு கவுன்சிலர்.
இப்பகுதியில் ஒரு சில தெருக்களில் ரோடு போடவில்லை. மண் ரோடாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும் சகதியும் ஆக மாறிவிடுகின்றது. இது டூவீலர் உள்ளிட்ட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. இதனால் வாகனங்களை அருகில் உள்ள தெருவில் நிறுத்தி நடந்து வர வேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டினை சீரமைப்பதோடு, ரோடு இல்லாத தெருக்களில் உடனடியாக ரோடு போட வேண்டும்.
- ரவிக்குமார், தனியார் ஊழியர்.

