/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள்: விபத்து அபாயம்
/
ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள்: விபத்து அபாயம்
ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள்: விபத்து அபாயம்
ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள்: விபத்து அபாயம்
ADDED : செப் 06, 2024 04:31 AM

விருதுநகர்: விருதுநகர் -- மதுரை ரோடு இணையும் சர்வீஸ் ரோட்டில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர். இப்படி சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்கள் மீது நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் நகராட்சி, புறநகர், ஊராட்சி பகுதிகளில் அதிகமானோர் கால்நடைகளை வளர்க்கின்றனர். கால்நடைகளை புறநகர், ஊராட்சி பகுதிகளில் வளர்ப்பவர்கள் மேய்ச்சல் நிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். நகராட்சி பகுதியில் வளர்ப்பவர்கள் வீட்டு வாசலில் கட்டி போட்டு கால்நடைகளை வளர்க்கின்றனர்.
ஆனால் சிலர் தங்கள் வீடுகளில் கால்நடைகளை காலை நேரத்தில் வீட்டில் இருந்து அவிழ்த்து விடுகின்றனர். கால்நடைகள் மார்கெட், தெப்பம், குப்பை கொட்டும் இடங்களில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு சுற்றிதிரிகின்றன. இதன் உரிமையாளர்கள் மாலை நேரத்தில் வந்து கால்நடைகளை பிடித்து செல்கின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் - மதுரை ரோடு நான்கு வழிச்சாலையில் இணையும் லட்சுமி நகர் செல்லும் ரோட்டில் மாடுகள் சுற்றித்திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. மாடுகள் மதிய நேரத்தில் நிழற்காக மேம்பாலத்தின் அடியில் நிற்கின்றன. இந்த ரோடு வழியாகவே விருதுநகரில் இருந்து கள்ளிக்குடி, திருமங்கலம், மதுரைக்கு செல்லும் கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு செல்ல வழியில்லாமல் சில நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் எழுப்பும் ஒலியால் மாடுகள் மிரண்டு நடந்து, சைக்கிள், டூவீலரில் செல்பவர்கள் மீது மோதுவதால் விபத்துக்களும் ஏற்படுகிறது.
சில நேரத்தில் நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் நடந்து ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. எனவே வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.