/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டமங்களத்தில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
/
பட்டமங்களத்தில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
பட்டமங்களத்தில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
பட்டமங்களத்தில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
ADDED : ஜூன் 22, 2024 04:48 AM

நரிக்குடி: நரிக்குடி பட்டமங்களத்தில் கூட்டுறவு வங்கியின் சுவரை துளையிட்டும், மேற்கூரையை உடைத்தும் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
லாக்கரை உடைக்க முடியாமல் போனதால் முயற்சி வீணானதையடுத்து 67 பவுன் நகை தப்பியது.
நரிக்குடி பட்டமங்களம் புத்தனேந்தலில் 47 ஆண்டுகளுக்கு முன் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி கடன் சங்கம் துவக்கப்பட்டது.
முத்துப்பாண்டி 45, கூடுதல் பொறுப்புச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வங்கியை திறக்க வந்தபோது, சுவர் துளையிட்டும் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததையும் கண்டார். லாக்கர் இருந்த அறைக்கு சென்று பார்த்த போது, மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.
லாக்கர் சேதமடைந்திருந்தது. லாக்கரை திறந்து பார்த்த போது அதிலிருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 67 பவன் நகைகள் அப்படியே இருந்தது. சி.சி.டி.வி., கேமரா சேதப்படுத்தப்பட்டிருந்தது.
பின் சி.சி.டி.வி., கேமரா பதிவை ஆய்வு செய்ததில் நள்ளிரவில் சுவரை துளையிட்டும், மேற்கூரையை உடைத்தும் கொள்ளையர்கள் உள்ளே இறங்கியது தெரிந்தது. லாக்கரை உடைக்க முயற்சி செய்து பலனளிக்காததால் விட்டு தப்பி சென்றனர்.
தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.