/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ. 1.14 கோடி மோசடி மேலாளர் மீது வழக்கு
/
ரூ. 1.14 கோடி மோசடி மேலாளர் மீது வழக்கு
ADDED : ஜூலை 07, 2024 01:46 AM
விருதுநகர்: சிவகாசியில் பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் ரூ. 1. 14 கோடி மோசடி செய்த மேலாளர் விமல்ராஜ் 46, மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவகாசியில் காமராஜர் ரோட்டைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் சிவகாசி -யில் உள்ள ஸ்ரீசாரு பிரிண்டர்ஸ், கோல்டன் லோட்டஸ் பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். இவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் நிறுவன உரிமையாளர் உமாதேவி 43, நிறுவன கணக்குகளை சரிபார்த்தார். அப்போது பிற நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய காசோலைகளை விமல்ராஜ், தனது வங்கி கணக்கில் செலுத்தி ரூ. 1 கோடியே 14 லட்சம் கையாடல் செய்ததை கண்டறிந்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.